புல்வாமா தாக்குதல்:சுப்பிரமணியன் உடல் சொந்த ஊருக்கு வந்தது!!

தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவலப்பேரிக்கு கொண்டுவரப்பட்டது.

தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவலப்பேரிக்கு கொண்டுவரப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழந்துள்ளார்.அதேபோல் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் உயிரிழந்துள்ளார்.தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

unknown node

தாக்குதலில் இறந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். அஞ்சலிக்கு பிறகு சுப்பிரமணியன் உடல் தூத்துக்குடி சவலாப்பேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவலப்பேரிக்கு கொண்டுவரப்பட்டது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.