கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள் – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss tweeted that the central government should set up an access storage underground center in an area where there is no movement of people.

மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்மூலம் அணுக்கழிவுகள் அங்கேயே சேமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இது ஆபத்து. அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான பாதாள கட்டமைப்பு வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் இது. முதல் இரு அணு உலைகளின் கழிவுகளும் அந்த வளாகத்தில் தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அணுக்கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கு வெளியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

unknown node
கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள் – அன்புமணி ராமதாஸ்