மழை பாதிப்பு : தமிழகத்திற்கு வருகை தரவுள்ள மத்திய குழு ...!

The Central Committee is scheduled to visit Tamil Nadu to study the impact of the rains.

மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய குழு வருகை தர உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழு உடனடியாக தமிழகம் வர உள்ளது. இவர்கள் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் குறித்து பார்வையிட உள்ளனர்.