மழை பாதிப்பு நிலவரம் : 2-வது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு!

The Chief Minister is conducting a face-to-face inspection with the staff on the rain damage situation for the 2nd day.

மழை பாதிப்பு நிலவரம் குறித்து  ஊழியர்களுடன் 2-வது நாளாக முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

பருவமழை தொடங்குவதில் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அந்த வகையில் இன்றும் 2-வது நாளாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாயை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டுள்ளார்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கல்யாணபுரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் முதல்வர் வழங்கியுள்ளார். மேலும், கல்யாணபுரம் பகுதியிலுள்ள மருத்துவ முகாமையும் முதல்வர் பார்வையிட்டுள்ளார்.