வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பத்தூர்,தருமபுரி,சேலம்,நாமக்கல்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,ஈரோடு,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,தேனி ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
unknown nodeமேலும்,நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.அதே சமயம்,சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
unknown nodeமேலும்,லட்ச்சதீவு பகுதி,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி,கேரளா கடலோரப்பகுதி மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.