#RainAlert:தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி,இன்று தென் தமிழகம்,வட உள்தமிழக மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல நாளையும் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் இன்றும்,நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
12.04.2022 தேதியிலிருந்து தமிழகத்தின் அடுத்த ஐந்து நாட்களுக்குகான வானிலை முன்னறிவிப்பு. pic.twitter.com/3d1RFhSzru
— TN SDMA (@tnsdma) April 12, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025