ரஜினி தனது ரசிகர்களை அவமானப்படுத்தியுள்ளார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சந்தித்தார்.இதன் பின்னர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் வெற்றி பெற்றமைக்கு வாய்ப்பளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்.பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களை கவர்ந்த கருணாநிதி 93 வயதிலும் நீதிமன்றம் சென்ற போது, ஒரு நடிகர் விவிலக்கு கேட்பது அபத்தமானது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று .ரஜினி தனது ரசிகர்களை அவமானப்படுத்தும், அசிங்கப்படுத்தும் செயல் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள நிலையில் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டார்.மேலும் அவரது மனுவில், நடிகர் என்பதால் தூத்துக்குடி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகும் போது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிடுவார்கள். இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறினார் .கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…