ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல், அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார்-திருநாவுக்கரசர்

ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் சேர மாட்டார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல், அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார்.எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.
மேலும் மோடி வெளிநாட்டில் இருக்கும் பழக்க தோஷத்தால்தான் நம் தமிழக அமைச்சர்களும் வெளிநாடு செல்கின்றனர்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 100 நாள் ஆட்சி கடந்த 5 ஆண்டு ஆட்சியை போன்றே படுதோல்வியை சந்தித்துள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் பணப்புழக்கம் இல்லாமல் பல்வேறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025