#ரஜினியே_எங்கள்_முதல்வர்…ட்ரண்டாகும் ஹேஷ்டேக்…!தலைவரும் நீயே முதல்வரும் நீயே..பறக்கும் ட்விட்கள்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published by
kavitha

நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக  இன்று  செய்தியாளர்கள் சந்திக்கிறார் என்ற வெளியாகிய தகவலை அடுத்து சமூகவலைதளங்களில் ரஜினிகுறித்த #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஸ்டேக் ட்ரண்டாகி வருகிறது.

கடந்த வாரம்  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் , கட்சியை எப்போது தொடங்குவது , கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து இதில் முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களம் காணலாமா என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி விவாதித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே ஏற்பட்டதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இதன் பின் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image

இன்று காலைசரியாக  10.30 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கிரார். தன் வீட்டிற்கு வெளியேயும், விமான நிலையத்தில் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த்  அரசியல் கட்சி தொட்ங்குவேன் என்ற அறிவிப்புக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பது  இதுவே முதல்முறை.ஆகையால் இந்தச் சந்திப்பில் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் மற்றும் தமிழக அரசியல் களமே உற்றுநோக்குகிறது இந்நிலையில் சமூக வலையதளங்களில் #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஷ்டேக் ட்ரண்டாகி வருகிறது.

அதே போல் சமூக வலைதளங்களில் இது குறித்த மீம்ஸ்களும் பரவி வருகிறது.

 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

4 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

7 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago