ராமநாதபுரம்: அரசு பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே,  தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேருந்து

GovernmentBus

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே,  தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர், தனக்கு எதிரே வந்த மீன் வண்டி மீது மோதுவதை தவிர்க்க முயற்சிக்கும் போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியுள்ளது என்று கூறப்படுகிறது.