ராமநாதபுரம் சாலை விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்!

ராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர்

Tamilnadu CM MK Stalin

ராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் நேற்று மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.