சென்னை வந்து, திருப்பதி செல்லும் குடியரசு தலைவர்!

Ramnath Kovind arrives Chennai today and goes Tirupati. Following his arrival, security arrangements at Chennai airport were strengthened.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று சென்னை வந்து திருப்பதி செல்லவிருக்கிறார். அவரை வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று திருப்பதி வரவுள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார். காலை 9.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு வரவேற்பு செலுத்தப்படும். அதனைதொடர்ந்து காலை 9.45 மணிக்கு மணியளவில் திருப்பதி செல்லவுள்ளார்.

பின் மாலையில் தரிசனத்தை முடித்து விட்டு 5.35 மணிக்கு சென்னை வந்தடைவார். அதனைதொடர்ந்து மாலை 5.45 மணிக்கு தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார். மேலும் குடியரசு தலைவர் சென்னை வந்து திருப்பதி செல்லவுள்ள நிலையில், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை பழைய விமான நிலையத்தில் பணியாற்றும் பலத்த சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.