மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.!

2025 - 2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

MBBS - BDS

சென்னை : தமிழகத்தில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடிஎஸ் (BDS) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 25) வெளியிடப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தப் பட்டியலை வெளியிட்டார்.

நெல்லையைச் சேர்ந்த சூர்யநாராயணன் முதலிடத்தையும், சேலத்தைச் சேர்ந்த அபிநித் நாகராஜ் 2ஆம் இடத்தையும் பிடித்தார். கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வுகள் ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் 72,743 மாணவ, மாணவிகள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தனர், இதில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு 43,315 பேர் விண்ணப்பித்தனர், மற்றும் 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

மேலும், பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்ம், பி.பி.டி., பி.ஓ.டி. உள்ளிட்ட 19 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் மருத்துவ கல்வி இயக்குநரகத்தால் முன்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 250 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 7,850 இடங்களும் இந்தப் படிப்புகளுக்கு உள்ளன.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் முன்னர் வெளியிடப்பட்டு, 280 அரசு இடங்கள் மற்றும் 1,660 தனியார் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தரவரிசைப் பட்டியலை www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்