கேரளாவில் எலி காய்ச்சல் – டெங்கு காய்ச்சல் பரவல்: தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகள்.!

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்.

dengue fever

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்.

கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் தொடக்கத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.