எஸ்பிஐ ஏடிஎம் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை...!

The state police has recommended to the Tamil Nadu government to transfer the SBI ATM robbery case to the CBI.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசுக்கு மாநில காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் டெபாசிட் வசதிகொண்ட எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு முக்கியமான குற்றவாளிகள் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்தும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக தனிப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசுக்கு மாநில காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.