புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மறுப்பு.!

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே குளாவாய்ப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 1000 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும்

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே குளாவாய்ப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 1000 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த போட்டியை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரசித்து வருகின்றனர்.இந்நிலையில் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக  மத்திய ,மாநில அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடவேண்டாம் என  கூறப்பட்டுள்ளது.

இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற 31-ம் தேதி வரை ஜல்லிக்கட்டு , வடமாடு மற்றும்  மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக  அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.மேலும் கல்வி நிறுவனங்கள்,  திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது.