பழனிசாமியால் வட்டார கட்சியானது அதிமுக – டிடிவி தினகரன் விமர்சனம்

அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி.

அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 60 மாதங்களில் வரவேண்டிய கெட்ட பெயரை திமுக 20 மாதங்களில் பெற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி பணபலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியால் அதிமுக ஒரு வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது. எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவால் இடைத்தேர்தலில் வெல்ல முடியவில்லை.

அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. இன்னும் பலவீனப்பட்ட பிறகே திருந்துவார்கள் என விமர்சித்துள்ளார். மேலும், சுய காரணங்களுக்காக அமமுகவினர் வேறு கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது. உண்மையான தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். கட்சியை விட்டு வெளியேறுபவர்கள் சொந்த காரணத்திற்காக வெளியே செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.