சிறையில் இருந்து விடுதலை: பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் சசிகலா.!

Sasikala, who was recently released from jail after completing 4 years in jail, is coming to Tamil Nadu in the first week of February.

4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்து, சிறையில் இருந்து இன்று சற்றுமுன் விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவு பெற்று இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனார். இதனிடையே, கடந்த 20-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக விக்டோரியா அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று சசிகலாவை, இன்று காலை சிறைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விடுதலைக்கான கையொப்த்தை பத்திரத்தில் பெற்றனர்.

மேலும், விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களை மருத்துவமனையில் சசிகலாவிடம் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சசிகலாவின் சகோதரர் மகன் ஜெய் ஆனந்த் தெரிவித்தாக கூறப்படுகிறது. விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் கூறியுள்ளார். சசிகலாவின் கொரோனா சிகிச்சை ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.