கஜா புயல் நிவாரணம்...! தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி...!

கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்த பாதிப்பு குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். இந்தநிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி கூறி தமிழகத்திற்கான உரிய நிதியை பெறுவதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் இன்று காலை 09.45 மணி அளவில் சந்திக்கவுள்ளார்.

unknown node

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பான விவரங்களை உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது

கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.14 ஆயிரம் கோடி நிதி கேட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கஜா புயல் நிவாரணத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடியை உடனடியாக தர தமிழக அரசு கோரிக்கை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.