மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் வழக்கு – அர்ஜுன் சம்பத் விடுதலை!

அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

Arjun Sampath

அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

மத வெறுப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அர்ஜுன் சம்பத் விடுதலை செய்யப்பட்டார். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை விடுதலை செய்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2014-ல் நடந்த மாநாட்டில் மத வெறுப்பு பேச்சு தொடர்பாக அர்ஜுன் சம்பத், ஜெகதீசனார் ஆகியோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் இருந்து உரிய சாட்சியம் அளிக்காததால், வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.