பாஜக கொடியைக் கூட தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் பயன்படுத்த தயங்கினர் என கே.எஸ்.அழகிரி விமர்சனம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாழ்த்து பெற்றனர்.
இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று. இந்த வெற்றிக்கு திமுக ஆட்சியின் மீதான திருப்தியே காரணம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தெளிவு இருந்தது.
அதிமுக மற்றும் பாஜக தெளிவும் இல்லை, பாஜக கொடியைக் கூட தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவினர் பயன்படுத்த தயங்கினர். பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றால் அம்பானி, அதானிதான் இந்தியாவின் பிரதமராக இருக்க முடியும். யார் பிரதமர் வேட்பாளர்? என்பதை முடிவு செய்கிற அளவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்ந்துள்ளார். பணத்திற்கும் ஓரளவு செல்வாக்கு உண்டு, இல்லை என்று சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.