குற்றவாளிகளை கைது செய்ய ரூ.75.07 லட்சத்தில் 25 ரிபோர்ட் மூலம் விலங்கிடம் கருவிகள் வாங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். இதில், தமிழக காவல்துறையில் 101 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில், காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும் என்றும் காவல்துறையினருக்கு சீருடைப்படி ரூ.4,500ஆக வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதுபோன்று,காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும்,குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரூ.75.07 லட்சத்தில் 25 ரிமோட் மூலம் விலங்கிடும் (Remote Restraint Wrap) கருவி வாங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். இதன் மூலம் க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும் என்றார். சட்டம் – ஒழுங்கு குறித்து பரப்பப்படும் தகவல்களை உடனுக்குடன் திரட்டி மேல்நடவடிக்கை எடுக்க, சென்னை காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் சமூக ஊடகப் பிரிவு உருவாக்கப்படும் எனவும் முஉட்தலமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.