THAMIZHL NAADU- என மாற்ற கோரிக்கை – தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு.!

The High Court branch has ordered to consider and decide on the request to change TAMILNADU to THAMIZHL NAADU.

TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி பரிசீலித்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் கிளை உத்தரவியுள்ளது.

தமிழின் சிறப்பை கருத்தில் கொண்டு 8 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை செயலாளர், உள்துறை செயலர், முதன்மை செயலர் இதனை பரிசீலித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை Tamil Nadu என்பதற்கு பதில் Thamizhl Naadu என மாற்றக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.