தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் குறைவு.. அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்.

சாலை விபத்துகள் குறைவாக நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தில் அமைச்சர் பேசுகையில், அதிக அளவு சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். சாலை அமைக்கும் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் புறவழிசாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட சாலை அமைக்கும் பணியை இந்த ஆண்டே தொடங்க தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுக்க நவீன முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 10 ரயில்வேயை மேம்பால பணிகள் முடிவடைந்து பயன்ப்டுக்கு வந்த்துள்ளன. ஒரு வழி சாலை இருவழி சாலைகளாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றுளார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் மூலதன செலவுக்காக மட்டும் 40% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கிய பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம், 2022-23 நிதியாண்டில் ரூ.2 கோடி லாபத்தில் இயங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்காக ரூ.12,627 கோடி ஒதுக்கப்பட்டு, அவர்கள் அறிவித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகள் பெருகினால்தான் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.