"தங்க மங்கை" கோமதிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு

Rs 10 lakh cash prize announcement on behalf of the Tamil Nadu government for "gold mangai"

கத்தார் தலைநகர் தோஹாவில், ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில், 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஏற்கனவே  அதிமுக சார்பில்  800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 இலட்சம் மற்றும்  4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கோமதிக்கு  தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம்  பரிசு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ. 5 லட்சம் பரிசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.