கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவையில் உள்ள நடூர் பகுதியை நேரில் பார்வையிட்டார்.முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.மேலும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது.அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம், இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்படிருக்கிறார். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.ஏற்கனவே ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் .இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…