விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி கடனுதவி – அமைச்சர் பெரிய கருப்பன்

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இருந்ததை விட கூட்டுறவுத்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருகிறது எனவும்  தெரிவித்த அமைச்சர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நகைக்கடனும் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.