விவசாயிகளுக்கு ரூ.112.27 கோடி நிவாரண உதவி – முதல்வர் அறிவிப்பு

ஜனவரி, பிப்ரவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்.

ஜனவரி, பிப்ரவரியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.112.27 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உதவி வழங்கபடுகிறது.

9 மாவட்டங்களில் 93,874 ஹெக்டரில் நெல் உள்ளிட்ட இதர பயிர்கள் 33% க்கு மேல் சேதமானதாக கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.