புதிதாக பணியில் சேருவோருக்கு ரூ.18,000 ஊதியம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.

சென்னையில் கொரோனா கால செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் பணிபுரியவே செவிலியர்களுக்கு தற்காலிக ஆணை வழங்கப்பட்டது. பணி நீட்டிப்பு வழங்க முடியாது என செவிலியர்களிடம் அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். காலி பணியிடங்கள் இருப்பின் விண்ணப்பிக்குமாறு செவிலியர்களிடம் தெரிவித்துள்ளோம்.

தற்காலிக செவிலியர்களை இடமாற்றம் செய்வது என்பது இயலாத காரியம். மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும். புதிதாக பணியில் சேரும்போது ரூ.14,000 ஊதியம் என்பது ரூ.18,000 ஆக கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் என்பதால் அவர்களுக்கு பணி பாதிப்பு இருக்க கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.