வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி – முதல்வர் அறிவிப்பு.!

Default Image

துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. அதற்கு, இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் ஹவில்தார் மதியழகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வீரமரணம் அடைந்த மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர் தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்