#BreakingNews : மூணாறு நிலச்சரிவு -உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 8-நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 61 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.மேலும் பலர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025