மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி வேண்டும் – முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் .
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது .யூனியன் பிரதேசம் மற்றும் மாநில முதலமைச்சர்களுடன் 2ம் கட்டமாக இன்று ஆலோசனை நடத்திவருகிறார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் .
மேலும் மார்ச் மாதம் வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் .தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும்.தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டம் கீழ் ரூ.1000 கோடி வழங்க வேண்டும் .எல்லையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசுக்கு தமிழகம் ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025