#BREAKING: விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் -முதல்வர் அறிவிப்பு..!

The Chief Minister has announced an input relief of Rs 600 crore for 5 lakh farmers affected by the Nivar and Puravi storms

நிவர் மற்றும் புரேவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரணம் வரும் 7 ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், மானாவாரி, நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் ரூ.13,500 இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மானாவாரியில் நெல் தவிர பிறபயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410 இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.