ஊரக உள்ளாட்சி தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.!

The State Election Commission has issued guidelines regarding 9 District Rural Local Elections.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மக்கள் தங்கள் வாக்கை செலுத்த அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அமைதியாகவும், அச்சுறுத்தல் மற்றும் எந்த இடையூறும் இன்றி நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாக்குசாவடிகளுக்கு அருகே அமைக்கப்படும் முகாமில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும் எண்வம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை மீறி வேட்பாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.