கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியதமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரானா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது தற்போது வரை இந்திய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவரது கருத்துக்கு பலரும் ஆதரவும் அளித்தனர். இதுபோன்று சனாதனம் குறித்த பேச்சு பல இடங்களில் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சனாதனம் எதிர்ப்பு குறித்து மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சனாதன எதிர்ப்பு பற்றிய கருத்துகளை மாணவர்கள் பேச வேண்டும் என்று திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் ராஜாராமன் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சனாதன எதிர்ப்பு கருத்துக்களை 15ம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சனாதனம் எதிர்ப்பு பற்றி கருத்து கூற மாணவர்களுக்கு திருவாரூர் திருவிக அரசு கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்தது குறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக நஞ்சை விதைக்கிறது. கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிராக இல்லையா? என கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கையை பகிர்ந்து பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node