புதிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் சஞ்சீப் பானர்ஜி

Sanjeev Banerjee will take over as the new judge of the Chennai High Court today,after president ramnath approvel

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி இன்று பதவியேற்க உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி மேகாலயாவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் பதவியை ராஜினாமா செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.

இதைத்தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.அதன்படி தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து  வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் இவர் பதவிக்காலம்  முடிவடைந்தது.

ஆகவே புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்தது.கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்க உள்ளார்.