பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்து – நிதியுதவி அறிவித்த நெல்லை திருமண்டலம்!

Nellai Thirumandalam donates Rs 3 lakh to the families of 3 students who were killed in the collapse of a softer school wall

சாஃப்டர் பள்ளிச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு நெல்லை திருமண்டலம் ரூ.3 லட்சம் நிதியுதவி.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும்சாஃப்டர்மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துயரச் சம்பவத்தை அறிந்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த நான்கு மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நெல்லைசாஃப்டர்பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் நெல்லை திருமண்டல திருச்சபை சார்பில் இறந்துப்போன மாணவர்களுக்கு ரூபாய் 3 லட்சமும், காயமடைந்த மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் குடும்பத்தினரை சந்தித்து விரைவில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.