பல இடங்களில் கனமழை – 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.குறிப்பாக கடலூர்,நாகை,திருவாரூர்,தஞ்சை ,கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதற்காக ஆட்சியர் உமா மகேஷ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஏற்கனவே தொடர் மழை காரணமாக திருச்சி,அரியலூர்,திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 4 வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025