பருவ நிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு அறிவியலாளர்களும், மாணவர்களும் தீர்வு காண வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டைக் கட்டமைப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.
பட்டம் பெறும் மாணவர்கள், தொழில்முனைவோராக பரிசீலிக்க வேண்டும் என்றும், சிறந்த அறிவியலாளர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் அந்தப் பாதையில் பயணித்துள்ளதாகவும் ராம்நாத்கோவிந்த் தெரிவித்தார்