“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு வருகிறேன் என சொல்லிவிட்டேன். எதற்காக சம்மன் ஒட்ட வேண்டும்? விசாரணைக்கு வருவேன். நாளை 11 மணிக்குதான் வர வேண்டும் என்றால் வர முடியாது, முடிந்ததைப் பாருங்கள்” என்றார்.
இப்படி, சீமானுக்கு எதிரான பலாத்கார வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில், சரமாரியான கேள்விகலை எழுப்பி விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய விஜயலட்சுமி, “முதலில் என்னை யார் என்றே தெரியாது என சீமான் கூறினார். 2023ல் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது பேசியபடி மாதம் ரூ.50,000 அனுப்பி வைத்தார். முதலில் என்னை காங்கிரஸ் அழைத்து வந்ததாகவும், பிறகு பாஜக அழைத்து வந்ததாகவும், தற்போது திமுக அழைத்து வந்ததாகவும் சீமான் கூறுகிறார்.
அவர்களை ஏன் வம்புக்கு இருக்கிறீர்கள்? என்னை ஏமாற்ற வேண்டாம், உங்களை பார்க்க நான் காத்திருக்கிறேன். என்னிடம் உட்கார்ந்து பேச வரச் சொன்னீர்களாமே, நேரில் வாங்க உங்கள நேர்ல பாத்து, என்ன பாத்தா எப்படிடா இருக்குனு கேக்க நான் ரெடியா இருக்கேன்.
இரண்டு நாளுக்கு முன்புகூட என்னிடம் டீல் பேச ஆள் அனுப்பினான் இந்த சீமான். அப்போ பிரெஸ் மீட்ல என்னைய பத்தி பேசிருக்கீங்க. நா அப்படி, இப்படி னு பேசிருக்கீங்க. என் பாவமெல்லாம் உங்கள சும்மாவே விடாது சீமான்” இவ்வாறு பேசியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.