தமிழ்நாடு கொடி – சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

சேலத்தில் தமிழ்நாடு கொடி என்று கூறி ஒரு கொடியை ஏற்றியதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் தமிழ்நாடு கொடி என்று கூறி ஒரு கொடியை ஏற்றியுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்,அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில்,அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது,கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதது, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025