அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று 2வது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது. இதன்பின், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பான தகவலுக்கு இதனை க்ளிக் செய்யவும்:அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும் – உச்சநீதிமன்றம் கருத்து!
இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். ஆக.1-ஆம் தேதி மத்திய ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினர்.
செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க 2 மணி நேரம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், ஆக.1-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்போது இருதரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
