செந்தில் பாலாஜி வழக்கில் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வின் மாறுபட்ட தீர்ப்பால் 3-ஆவது நீதிபதி இன்று விசாரிக்கிறார்.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஆவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இன்று விசாரிக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வின் மாறுபட்ட தீர்ப்பால் 3-ஆவது நீதிபதி இன்று விசாரிக்கிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என 3-ஆவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் விசாரிப்பார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு தகுந்ததா எனவும் 3-ஆவது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார்.
செந்தில் பாலாஜியை கைது செய்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். இதன்பின், ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்த மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை ஆவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் இன்று விசாரிக்கிறார்.
