செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கரூரில் அமைச்சர்

Enforcement Directorate Logo

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தினர்.

தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அமலாக்கத்துறை சோதனைக்காக மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் தனலட்சுமி மார்பிள் நிறுவனத்தில் 24 மணி நேரமாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. இந்த நிலையில், கரூரில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தனலட்சுமி மார்பிள் தொழிற்சாலை உரிமையாளர் பிரகாஷ் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் திமுக ஒன்றிய செயலாளரின் உறவினரான காளியப்பன் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத் துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு ஆவணங்களை திரட்ட அமலாக்கத்துறை மீண்டும் மீண்டும் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இரண்டாவது நாளாக கரூரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.