மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன் , மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தோறும் எனவும் மாணவர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும், மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கும் மாணவிகள் மின்னஞ்சலில் புகார் கடிதம் அனுப்பியிருந்தனர்.
ஹரி பத்மன் கைது
இந்த நிலையில், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பேராசிரியர் ஹரி பத்மன் தலைமறைவாகி இருந்தார். இதனை அடுத்து தனிப்படை அமைத்து, ஹரி பத்மனை ஹைதிராபாத்தில் இருந்து சென்னை வந்த அவரை அவரது நண்பர் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ஆஜர்
இதனையடுத்து, மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார். கலாஷேத்ரா இயக்குநரிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தி வருகிறார்.