சென்னை : சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,230-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது. இந்த உயர்வு தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலையும் மாற்றமின்றி ரூ.2,70,000-க்கு விற்பனையாகிறது.சென்னை சில்லறை தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தக சந்தையில் இன்று ஏற்பட்ட இந்த விலை உயர்வு, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவை காரணமாக அமைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணம், பண்டிகை மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், விலை மேலும் உயரும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்குமாறு வர்த்தகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
