சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் திடீர் தரையிறக்கம்!

சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் அமெரிக்க பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி காரணமாக விமானம் தரையிறக்கம்.

சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் அமெரிக்க பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி காரணமாக விமானம் தரையிறக்கம்.

நடுவானில் பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் அமெரிக்க பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, நெஞ்சு வலி ஏற்பட்ட அமெரிக்க பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சை தருவதற்காக சென்னையில் விமானம் தரையிறக்கப்பட்டது. விசாகப்பட்டினம் வழியாக சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் உடனடியாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.