#BREAKING: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.. முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..!

The Chief Minister has announced Rs 3 lakh each to the families of those who died in the firecracker factory accident.

பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டதால், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிவகாசி காளையார் குறிச்சி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் எனவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.