SivaShankarBaba: சிவசங்கர் பாபா மீதான வழக்கு – சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு!

மாணவிகளுக்கு க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்

SivaShankarBaba

மாணவிகளுக்கு க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை கேளம்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி நிர்வாகியாக பொறுப்பில் இருந்த சிவசங்கர் பாபா மீது அங்கு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் இவர் மீது பாலியல் புகார் அளித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த புகார்கள் பதியப்பட்டன. இந்த புகாரின் பெயரில் சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என இவர்மீதான வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்குகள் மீது விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில், எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2021-ல் பதியப்பட்ட வழக்கை ரத்த செய்யகோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தெளிவற்றது என்றும் முறையான விசாரணையின்றி தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும் சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் சிபிசிஐடிஉத்தரவிட்டு, சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்.25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.