இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி; அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்.!

இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, திறன்  மேம்பாட்டு பயிற்சி வழங்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, திறன்  மேம்பாட்டு பயிற்சி வழங்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி உலகளவில் தகுதியுள்ளவர்களாக மாற்றும் திட்டத்தினை செயல்படுத்தவேண்டும், இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்ப்படுத்தித்தரும் நோக்கில் பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க வேண்டும், குறுகிய கால பயிற்சி மற்றும் தரமான பயிற்சி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உதயநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசிய போது, இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.